64எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரியுடன் களமிறங்கும் புதிய Redmi போன்: எப்போது அறிமுகம்?

|

ஒப்போ, ஒன்பிளஸ், மோட்டோ நிறுவனங்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ரெட்மி நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

ரெட்மி நோட் 11 சீரிஸ்

ரெட்மி நோட் 11 சீரிஸ்

அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11 சீரிஸ் போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம் என்றே கூறலாம். அதாவது இந்த போன்கள் பட்ஜெட் விலையில் சூப்பரான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன.

கிருஷ்ணா முதல் சிம்ரன் வரை- உங்க பெயரும் லிஸ்டில் இருக்கலாம்: வீக்கான பாஸ்வேர்ட்கள் பட்டியல் வெளியீடு!கிருஷ்ணா முதல் சிம்ரன் வரை- உங்க பெயரும் லிஸ்டில் இருக்கலாம்: வீக்கான பாஸ்வேர்ட்கள் பட்டியல் வெளியீடு!

 ரெட்மி நோட் 11 எஸ்இ

ரெட்மி நோட் 11 எஸ்இ

இந்நிலையில் ரெட்மி நோட் 11 சீரிஸ்-இல் மேலும் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். பிரபல டிப்ஸ்டர் Kacper Skrzypek வெளியிட்ட தகவலின்படி, ரெட்மி நோட் 11 எஸ்இ எனும் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்றுதெரிவித்துள்ளார்.

iPhone 13-ஐ கம்மி விலையில் வாங்க நெருங்கும் வாய்ப்பு! iPhone 14 ரிலீஸ்க்கு முன் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!iPhone 13-ஐ கம்மி விலையில் வாங்க நெருங்கும் வாய்ப்பு! iPhone 14 ரிலீஸ்க்கு முன் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

சீனா

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ரெட்மி நோட் 11 எஸ் பெயர் அடங்கிய புது மாடல் விவரங்களை MIUI குறியீடுகளில் கண்டறிந்துள்ளார் டிப்ஸ்டர்.

காலாவதியாகும் ஐஎஸ்எஸ்- பசிபிக் கடலில் மூழகப் போகும் சர்வதேச விண்வெளி மையம்: 2030-ல் நாசாவின் திட்டம்!காலாவதியாகும் ஐஎஸ்எஸ்- பசிபிக் கடலில் மூழகப் போகும் சர்வதேச விண்வெளி மையம்: 2030-ல் நாசாவின் திட்டம்!

எப்போது அறிமுகம்

எப்போது அறிமுகம்

அதேபோல் MIUI குறியீடுகளின் படி இந்த புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ போன் ஆனது ரெட்மி நோட் 10S மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று கூறியுள்ளார் டிப்ஸ்டர் Kacper Skrzypek. அதேபோல் இந்த போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட
வாய்ப்பு உள்ளது. மேலும் இப்போது இணையத்தில் கசிந்த ரெட்மி நோட் 11 எஸ்இ போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 350 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ரெட்மி போன்.

டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..

அருமையான பிராசஸர்

அருமையான பிராசஸர்

இந்த புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வசதியை கொண்டுள்ளது. பல விவோ போன்களில் இதேபிராசஸர் வசதி தான் உள்ளது. பின்பு இந்த சிப்செட் கேமிங் வசதிக்கு மிக அருமையாக பயன்படும் என்றே கூறலாம்.

மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன்.

டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!

சூப்பரான கேமரா

சூப்பரான கேமரா

புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவரும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்.

இந்த டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களிடம் இருந்தால் கில்லி தான்.. மாணவர்கள் மிஸ் பண்ணவே கூடாது..இந்த டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களிடம் இருந்தால் கில்லி தான்.. மாணவர்கள் மிஸ் பண்ணவே கூடாது..

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். குறிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களும்
இவற்றுள் அடக்கம்.

பட்ஜெட் விலையில் 42 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரியுமா?பட்ஜெட் விலையில் 42 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரியுமா?

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

அதேபோல் ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக நிர்வகிப்பது?இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக நிர்வகிப்பது?

5ஜி போன்கள்

5ஜி போன்கள்

மேலும் இனி வரும் மாதங்களில் ரெட்மி நிறுவனம் அதிகமாக 5ஜி போன்களை அறிமுகம் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 11 SE smartphone to be launch in India soon!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X