கம்மி விலையில் 64MP கேமராவுடன் அறிமுகமான ரெட்மி நோட் 11 எஸ்இ போன்: நம்பி வாங்கலாமா?

|

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 11 எஸ்இ எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

பட்ஜெட் விலை போன்

பட்ஜெட் விலை போன்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால், சிலர் இதை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் நிறை மற்றும் குறைகளை தெரிந்து கொண்டு வாங்குவது மிகவும் நல்லது.

அதாவது ஒரு போனின் வடிவமைப்பு பார்த்து அல்லது மற்றவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டு எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.. குறிப்பாகபோனின் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அதன்பின்பு வாங்கலாமா? வேண்டாமா? என்கிற முடிவுக்கு வருவது நல்லது.

உங்க PAN-ஆதார் லிங்க் ஸ்டேட்டஸை உடனே செக் செய்யுங்க.! இனி லிங்க் செய்தால் ரூ.1000 அபராதமா?உங்க PAN-ஆதார் லிங்க் ஸ்டேட்டஸை உடனே செக் செய்யுங்க.! இனி லிங்க் செய்தால் ரூ.1000 அபராதமா?

 டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளே எப்படி?

6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன். ஃபுல் எச்டி பிளஸ்டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். அதேபோல் இந்த போன் வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதுதவிர டிஸ்பிளேவின் அம்சங்களும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது 1080 x 2400 பிக்சல்ஸ், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100% DCI-P3 colour gamut, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் டிஸ்பிளே வசதி மிகவும் அருமையாக உள்ளது.

கண்ணுல போட்டு பார்த்தா மொத்தமும் தெரியும்: Lenovo ஸ்மார்ட் கிளாஸ் வாங்குனா இவ்ளோ பலனா?கண்ணுல போட்டு பார்த்தா மொத்தமும் தெரியும்: Lenovo ஸ்மார்ட் கிளாஸ் வாங்குனா இவ்ளோ பலனா?

கேமிங் சிப்செட்

கேமிங் சிப்செட்

பிரீமியம் போன்களில் இருக்கும் கேமிங் சிப்செட் வசதி இந்த போனில் கூட உள்ளது. அதாவது மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் Mali-G76 3EEMC4 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல்.

கண்டிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். அதாவது கேமிங் ஆப்ஸ்களை இதில் தடையின்றி பயன்படுத்த முடியும். இதுபோன்ற சிப்செட் கொண்ட போன்களை கண்டிப்பாக அதிக வருடங்கள் பயன்படுத்த முடியும்.

அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் கூட கிடைக்கும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட குறைவாக இருக்குமா? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?புது iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட குறைவாக இருக்குமா? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?

குவாட் ரியர் கேமரா

குவாட் ரியர் கேமரா

புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

கண்டிப்பாக இந்த 64எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா அனைத்து இடங்களிலும் உதவும். இதன் உதவியுடன் துல்லியமானபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். ஆனால் 2எம்பி கொண்ட கேமராக்கள் ஒரளவு பயன்படும் அவ்வளவுதான்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். இந்தரெட்மி போனின் உதவியுடன்கண்டிப்பாக அசத்தலான செல்பி படங்களை எடுக்கமுடியும்.

 நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி

நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். கண்டிப்பாக நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது

பொதுவாக கேமிங் சிப்செட் கொண்ட போன்களில் 4000 எம்ஏஎச் அல்லது 4500 எம்ஏஎச் பேட்டரி வசதிதான் இடம்பெறும். ஆனால் இந்த ரெட்மி போன் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது.

Zomato புது அம்சம்: டெல்லி டூ குமரி, விமானத்தில் உணவு டெலிவரி.. மொத்த இந்திய உணவும் உங்க கையில்!Zomato புது அம்சம்: டெல்லி டூ குமரி, விமானத்தில் உணவு டெலிவரி.. மொத்த இந்திய உணவும் உங்க கையில்!

ஆடியோ எப்படி?

ஆடியோ எப்படி?

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது ஹை-ரெஸ் ஆடியோவுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்களை வழங்குகிறது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

மேலும் ஸ்பிளாஸ்-ப்ரூஃப் டிசைன், இசட்-ஆக்சிஸ் ஹாப்டிக்ஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஐஆர் பிளாஸ்டர்போன்ற அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ரெட்மி போன்.

கடுகளவும் வாய்ப்பில்ல ராஜா: டிரம்பை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டும் Google., இப்போ இதுக்கும் ஆப்பு!கடுகளவும் வாய்ப்பில்ல ராஜா: டிரம்பை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டும் Google., இப்போ இதுக்கும் ஆப்பு!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் மிகவும் சிறப்பாகவே உள்ளது. ஆனால் இதில் 5ஜி வசதி இல்லை. விரைவில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரெட்மி போனில் 5ஜி ஆதரவு இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

அதேபோல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த போன்ல கேமரா சும்மா சூப்பராக இருக்கும்! விலையும் ரொம்ப கம்மி.! லிஸ்டை உடனே பாருங்க.!இந்த போன்ல கேமரா சும்மா சூப்பராக இருக்கும்! விலையும் ரொம்ப கம்மி.! லிஸ்டை உடனே பாருங்க.!

நம்பி வாங்கலாமா?

நம்பி வாங்கலாமா?

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது. வெள்ளை, கருப்பு, ஊதா மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களுமே சிறப்பாகத் தான் உள்ளது. ஆனால் இதில் 5ஜி ஆதரவு மட்டும் இல்லை என்பது தான் மிகப் பெரிய குறை. மற்றபடி இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Redmi Note 11 SE Smartphone Review: Is it Worth to Buy?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X