ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்
இந்தியாவில் ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களி விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.17,999-விலையில் வாங்க முடியும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 23-ம் தேதி அமேசான், மி.காம், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு வரும். பாண்டம் ஒயிட், ஸ்டார் ப்ளூ மற்றும் ஸ்டெல்த் பிளாக் நிறங்களில் இந்த புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி AMOLED Dot டிஸ்பிளே
- 1,080x2,400 பிக்சல் தீர்மானம்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஒசி
- MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- ரேம்: 4ஜிபி/8ஜிபி
- மெமரி: 128ஜிபி
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது
- ரியர் கேமரா: 108எம்பி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- செல்பீ கேமரா: 16எம்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆதரவு
- 4ஜி எல்டிஇ, வைஃபை. புளூடூத் வி5.1
- ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,
- என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED Dot டிஸ்பிளே
- 1,080x2,400 பிக்சல் தீர்மானம்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஒசி
- MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- ரேம்: 6ஜிபி/8ஜிபி
- மெமரி: 128ஜிபி/256ஜிபி
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது
- ரியர் கேமரா: 108எம்பி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- செல்பீ கேமரா: 16எம்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆதரவு
- 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.1
- ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,
- என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட்

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 20,999-ஆக உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 15-ம் தேதி அமேசான், மி.காம், ரிலையன்ஸ் டிஜிட்டல் தளங்களில் விற்பனைக்கு வரும். மிராஜ் ப்ளூ, பாண்டம் ஒயிட் மற்றும் ஸ்டீல்த் பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள்
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications