Home
Mobile

இது நம்ம லிஸ்ட்ல இல்லையே: பிரபலமான 5G போனுக்கு விலையைக் குறைத்து தெறிக்கவிட்ட Redmi.!

ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் பல அற்புதமான 5ஜி போன்களை அறிமுகம் செய்து பட்டைய கிளப்ப போகிறது. அதாவது ஏற்கனவே ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி விட்டது ரெட்மி நிறுவனம். குறிப்பாக ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் 200 எம்பி கேமரா மற்றும் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும்.

விலையை குறைத்துள்ளது ரெட்மி

விலையை குறைத்துள்ளது ரெட்மி

இந்நிலையில் ரெட்மி நோட் 12 சீரிஸ் வெளியீட்டுக்கு முன்பு ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் விலையை குறைத்துள்ளது ரெட்மி நிறுவனம். அதாவது தற்போது ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போன் தற்போது ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கிறது. அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஸ்டோரேஜ் முன்பு ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போன் ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கிறது.

உடனடி தள்ளுபடி?

உடனடி தள்ளுபடி?

அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி பேபான் ரூ.19,790-க்கு பட்டியிலிடப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

AMOLED டிஸ்பிளே

AMOLED டிஸ்பிளே

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ரெட்மி போன்.

ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் உடன் ஏழு 5G பேண்டுகளுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. எனவே இந்த 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் மேம்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.

 108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா லைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

15 நிமிடம் சார்ஜ் செய்தால்?

15 நிமிடம் சார்ஜ் செய்தால்?

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை 15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என ரெட்மி கூறுகிறது.

எடை 202 கிராம்

எடை 202 கிராம்

அதேபோல் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5.1, GPS/ A-GPS, IR பிளாஸ்டர், USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 202 கிராம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 11 Pro Plus 5G smartphone price slashed: Here's the new price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X