ரெட்மி நோட் 11, நோட் 11எஸ், நோட் 11 ப்ரோ 4ஜி, நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! முழு விவரம்.!

|

ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 11, ரெட்மி நோட் 11எஸ், ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி, ரெட்மி நோட் ப்ரோ 5ஜி
ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் அனைத்து
நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த நான்கு ஸ்மார்ட்போன்களின் விலை
மற்றும் விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11 அம்சங்கள்

ரெட்மி நோட் 11 அம்சங்கள்

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இவற்றுள் அடக்கம்.

4ஜி எல்இடி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11 விலை

ரெட்மி நோட் 11 விலை

 • 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் விலை $179 (இந்திய மதிப்பில் ரூ.13,400)
 • 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் விலை $199 (இந்திய மதிப்பில் ரூ.14,900)
 • 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் விலை $229 (இந்திய மதிப்பில் ரூ.17,200)
 • ரெட்மி நோட் 11எஸ் அம்சங்கள்

  ரெட்மி நோட் 11எஸ் அம்சங்கள்

  ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி,33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11எஸ். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இவற்றுள் அடக்கம்.

  4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன.

  இன்னும் நோயாளி ஆகவா?- சுகர் டெஸ்டிங் மெஷின் ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் டெலிவரி செய்த அமேசான்.!இன்னும் நோயாளி ஆகவா?- சுகர் டெஸ்டிங் மெஷின் ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் டெலிவரி செய்த அமேசான்.!

  ரெட்மி நோட் 11எஸ் விலை

  ரெட்மி நோட் 11எஸ் விலை

  • 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் விலை $249 (இந்திய மதிப்பில் ரூ.18,700)
  • 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் விலை $279 (இந்திய மதிப்பில் ரூ.20,900)
  • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் விலை $299 (இந்திய மதிப்பில் ரூ.22,400)
  • ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி அம்சங்கள்

   ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி அம்சங்கள்

   ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இவற்றுள் அடக்கம்.

   4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன.

   ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி விலை

   ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி விலை

   • 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனின் விலை $299 (இந்திய மதிப்பில் ரூ.22,400)
   • 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனின் விலை $329 (இந்திய மதிப்பில் ரூ.24,700)
   • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனின் விலை $349 (இந்திய மதிப்பில் ரூ.26,400)
   • ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி அம்சங்கள்

    ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி அம்சங்கள்

    ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி,67 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இவற்றுள் அடக்கம்.

    5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன.

    ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி விலை

    ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி விலை

    • 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை $329 (இந்திய மதிப்பில் ரூ.24,700)
    • 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை $349 (இந்திய மதிப்பில் ரூ.26,300)
    • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை $379 (இந்திய மதிப்பில் ரூ.28,400)

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 11, Note 11S, Note 11 Pro 4G, and Note 11 Pro 5G launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X