Home
Mobile

இது "11" தொடர் பாஸ்- வரவிருக்கும் ரெட்மி 11 5ஜி, 11 ப்ரோ 5ஜி: புது தொழில்நுட்பம், மேம்பட்ட அம்சம்?

ரெட்மி நோட் 11 சீரிஸை அறிமுகப்படுத்த சியோமி தயாராகி வருகிறது. ரெட்மியின் பொது மேலாளர் லு வெயிபிங், சீனாவில் வரவிருக்கும் தொடர் துவக்கம் குறித்து முன்னதாகவே சுட்டிக்காட்டியிருந்தார். இதில் எதிர்பார்க்கப்படும் சாதனங்கள் ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ ஆகும். இரண்டு சாதனங்களின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஒரு புதிய கசிவு சில கூடுதல் விவரங்கள் வெளிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ரெட்மி ப்ரீமியம் சாதனங்களில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ விவரக்குறிப்புகள்

ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ விவரக்குறிப்புகள்

ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். சீன மைக்ரோ பிளாக்கிங் வலைதளமான வெய்போவில் டிப்ஸ்டர் மூலம் கசிந்துள்ளது. வெண்ணிலா ரெட்மி நோட் 11 சாதனமானது டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது மலிவான ஸ்மார்ட்போன்களுக்கான மீடியாடெக்கின் சமீபத்திய 5ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மலிவான மீடியாடெக்கின் சமீபத்திய 5ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆக்டோ கோர் எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி 8எஸ் 5ஜி ஆகும்.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்புடன் தரமான ரெட்மி நோட் 11 அறிமுகம் செய்யப்படும் என்பதை டிப்ஸ்டர் மேலும் வெளிப்படுத்தியுள்ளது. பிரதான கேமரா ஆக 50 மெகாபிக்சல் சென்சார் இருக்கும் எனவும் ஸ்மார்ட்போன் ஓஇஎம்-களின் இடைப்பட்ட தொலைபேசிகளுடன் மற்றொரு புதிய அறிமுகமாகும். மீதமுள்ள கேமரா சென்சார்கள் தற்போது வெளிப்படுத்தவில்லை.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் மேக்ரோ ஆழ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ரெட்மி நோட் 11 5ஜி 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 13 எம்பி செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டிப்ஸ்டர் தகவலின்படி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உதவியுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது.

65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி இணைப்போடு வரும் மாறுபாடு டைமென்சிட்டி 920 எஸ்ஓசி உடன் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் 50 மெகாபிக்சல் சென்சாருக்கு பதிலாக 108 எம்பி பிரதான கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது. செல்பி ஸ்னாப்பர் ஆதரவாக 16 எம்பி லென்ஸாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11 5ஜி 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11 5ஜி, நோட் 11 ப்ரோ 5ஜி விலை

ரெட்மி நோட் 11 5ஜி, நோட் 11 ப்ரோ 5ஜி விலை

டிப்ஸ்டர் தகவலின்படி, ரெட்மி நோட் 11 5ஜி ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.14000 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.18,500 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.29,000 மற்றும் ரூ.23,000 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 11 5G, Redmi Note 11 Pro 5G Getting Ready For Launch: Expected Specs, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X