வேறலெவல் அம்சங்கள்: ரெட்மி நோட் 11டி 5ஜி என்ற பெயரில் அறிமுகமாகும் அந்த ஸ்மார்ட்போன்!
ரெட்மி நோட் 11 தொடர் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சியோமியின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்களுக்கு முன்பாக ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ+ மாடல்களில் நாட்டிற்கு வர உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய புது கசிவின் படி வெண்ணிலா ரெட்மி நோட் 11 இந்தியாவில் ரெட்மி நோட் 11டி 5ஜி ஆக அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11 5ஜி, ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி ப்ரோ+ ஆகிய மூன்று தொடர்கள் ரெட்மி 11 சீரிஸில் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரெட்மி நோட் 11டி 5ஜி
டிப்ஸ்டர் கக்பெர் ஸ்க்ரிஜிபெக் தகவலின்படி, சியோமி இந்தியாவில் ரெட்மி நோட் 11டி 5ஜி ஆக ரெட்மி நோட் 11 5ஜி சாதனத்தை வெளியிடும் என தெரிவித்துள்ளார். ரெட்மி நோட் 11 ஆனது "evergo" என்ற குறியீட்டுப் பெயரை கொண்டிருக்கும் எனவும் வரவிருக்கும் சில ஸ்மார்ட்போன்களின் குறியீட்டுப் பெயரை டிப்ஸ்டர் பகிர்ந்திருக்கிறார். போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆனது "எவர்கிரீன்" எனவும் ரெட்மி நோட் 10டி 5ஜி ஆனது "எவர்காயின்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 11 ப்ரோ இந்தியாவில் சியோமி 11ஐ ஆக வரும்
ரெட்மி நோட் 11 ப்ரோ இந்தியாவில் சியோமி 11ஐ ஆகவும் ரெட்மி நோட் 11 ப்ரோ+ ஆனது சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஆகவும் நாட்டிற்கு வரும் என சமீபத்திய கசிவு தெரிவிக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 11 சீரிஸ் வெளியீடு மற்றும் பிராண்டிங் குறித்து சியோமி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என கூறப்படுகிறது.

அக்டோபர் மாதம் சீனாவில் அதிகாரப்பூர்வ அறிமுகமானது
ரெட்மி நோட் 11 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் சீனாவில் அதிகாரப்பூர்வ அறிமுகப்படுத்தப்பட்டது. வெண்ணிலா ரெட்மி நோட் 11 ஆனது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.6 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது.

50 மெகாபிக்சல் பிரதான கேமரா
ரெட்மி நோட் 11 ஆனது 50 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்பி வீடியோ வசதிக்கென 16 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. ரெட்மி நோட் 11 ஆனது 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கை கொண்டுள்ளது. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. இணைப்பு விருப்பங்களை ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும் எனவும் நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கு ஐபி53 என மதிப்பிடப்பட்டுள்ளது.

பின்புறம் மூன்று கேமராக்கள்
ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோபோன், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். குறிப்பாக பிரீமியம் ஸ்மார்ட்போனில் உள்ள அதே டிஸ்பிளே அம்சங்களைகொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications