Home
Mobile

அதெல்லாம் வாங்கியாச்சு- ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி நோட் 11 4ஜி!

ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. ரெட்மி நிறுவனம் வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. ரெட்மி நிறுவனம் பல விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ரெட்மி நோட் 11 4ஜி வேரியண்ட் சாதனம் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனானது குளோபல் வேரியண்ட் ஐஎம்டிஏ, இஇசி சான்றிதழ் இணையதளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனானது குளோபல் வேரியண்ட் ஐஎம்டிஏ, இஇசி சான்றிதழ் இணையதளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனானது சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது நவம்பரில் சந்தைக்கு வந்தது, இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. சியோமி தற்போது ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனின் உலகளாவிய மாறுபாட்டை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து சீன தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனானது ஐஎம்டிஏ மற்றும் இஇசி சான்றிதழ் இணையதளங்களில் காணப்பட்டதாகக் கூறப்பட்டதால் இதன் உலகளாவிய வெளியீடு விரைவில் வெளியிடலாம் என கூறப்படுகிறது.

உலகளாவிய வெளியீடு

உலகளாவிய வெளியீடு

மைஸ்மார்ட்பிரைஸ்-ல் காணப்பட்ட ஐஎம்டிஏ பட்டியலானது, புதிய ரெட்மி நோட் 11 4ஜி என நம்பப்படும் மாடல் எண் 2201117SG உடன் ஸ்மார்ட்போனை காணப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாதிரி எண் இஇசி சான்றிதழ் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ரெட்மி நோட் 11 4ஜி சாதனத்தின் எந்த விவரக்குறிப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இந்த சாதனத்தின் உடனடி உலகளாவிய வெளியீட்டை நோக்கி இருப்பதாக கூறப்படுகின்றன.

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள், அம்சங்கள்

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள், அம்சங்கள்

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள், அம்சங்கள் குறித்து எதிர்பார்க்கப்படும் தகவல்களை பார்க்கலாம். ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனின் உலகளாவிய பதிப்பானது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட்டுக்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. தட்டையான விளிம்புகளை கொண்ட சீன வகையை போல் இன்றி உலகளாவிய பதிப்பு பாரம்பரிய ரெட்மி வடிவமைப்பை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் வசதியோடு வரும் என கூறப்படுகிறது.

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வரும் எனவும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 9 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

50 எம்பி பிரைமரி கேமரா

50 எம்பி பிரைமரி கேமரா

அதேபோல் ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா தொகுதி பார்க்கையில், இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கும் எனவும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்களுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி ஸ்னாப்பர் வசதி கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனின் சீன வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது சிப்செட் தவிர பிற அம்சங்களை அப்படியே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 11 4G Smartphone Global Release Confirms by IMDA, EEC: Expected Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X