ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தானா?.!
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் வரும் ஜூலை 26-ம் தேதி அமேசான், மி.காம் உள்ளிட்ட வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும். இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. மேலும் குரோமியம் ஒயிட், கிராஃபைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் Mint Green நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி சாதனத்தின் அறிமுக சலுகைகள் குறித்து பார்க்கையில், எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈஸி இ.எம்.ஐ ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ரூ.1,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். பின்பு கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார்
உள்ளிட்ட பல சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications