இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் விபரங்கள்.!
ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த சாதனத்தை அமேசான் மற்றும் மி.காம் வலைத்தளங்களில் வாங்க முடியும். சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய
ஸ்மார்ட்போன். அதேபோல் குரோமியம் ஒயிட், கிராஃபைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் Mint Green நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. பின்பு எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஈஸி இ.எம்.ஐ பரிவர்த்தனைகள் வழியாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். இன்று மதியம் 12 மணி அளவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்ற பல்வேறு சிறப்பான அம்சஙகைள கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார்
உள்ளிட்ட பல சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.


Click it and Unblock the Notifications