தோரணையா நச்சுனு ஒரு கலர்- இனி ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனை இப்படியே வாங்கலாம்: விலை குறைவுதான்!
ரெட்மி நோட் 10 எஸ் பர்பிள் வேரியண்ட் வகை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரெட்மி இந்தியா இந்த வேரியண்டின் உடனடி அறிமுகம் குறித்து இரண்டு டீஸர்களை பகரிந்துள்ளது. இதில் ரெட்மி நோட் 10 எஸ் விரைவில் இந்தியாவில் ஊதா நிறத்தில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் நான்காவது வண்ண மாறுபாடு இதுவாகும்.

ரெட்மி நோட் 10 எஸ்
சியோமி நிறுவனம் இந்தாண்டு மே மாதம் ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த சாதனம் ஷேடோவ் பிளாக், ஃப்ராஸ்ட் வைட், டீப் சீ ப்ளூ(கடல் ப்ளூ) ஆகிய வண்ண விருப்பங்களில் வந்தது. இதன் தொடர்ச்சியாக பர்பிள் வண்ண மாறுபாடு விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது நிறுவனம்.

அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு
ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இரண்டு டீசர்களை பகிர்ந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாளை தொடங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "பெயிண்ட் தி டவுன் பர்பிள்" என்ற தலைப்பில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த டுவிட் புதிய வண்ண மாறுபா்டு வண்ணத்தை மட்டும் வெளிப்படுத்தியுள்ளது. சரியான தேதியை குறிப்பிடவில்லை.
பர்பிள் வண்ண மாறுபாடு
ரெட்மி நோட் 10எஸ் ஸ்டார்லைட் பர்பிள் மலேசியாவில் இந்திய மதிப்புப்படி ரூ.15,700 என்ற விலையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த பர்பிள் வண்ண மாறுபாடு இந்தியாவில் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஸ்ட்ரெயிட் பர்பிள் என வண்ண மாறுபாட்டின் பெயர் இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்
ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.14,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,999 எனவும் இருக்கிறது. புதிய வேரியண்டும் இதே அம்சங்களோடு இருப்பதால் விலை மாறுபாடு இருக்காது என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஹை-ரெஸ் ஆடியோ டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்பிளாஸ் ப்ரூஃப் டிசைன், இசட் ஆக்ஸிஸ் ஹாப்டிக்ஸ், 3.5மிமீ ஹெட்போன் ஜாக், ஐஆர் பிளாஸ்டர் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

AMOLED பஞ்ச் துளை டிஸ்ப்ளே
ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED பஞ்ச் துளை டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் எம்ஐயூஐ 12.5 உடன் இயக்கப்படுகிறது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் உடன் வருகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆதரவும் இருக்கிறது. கூடுதலாக ஏஐ ஃபேஸ் அன்லான் அம்சம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications