Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் அட்டகாசமான ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. தற்சமயம் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ்

Shadow Black, Frost White, Deep Sea Blue போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இப்போது ரெட்மி நோட் 10எஸ் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 அசத்தலான டிஸ்பிளே

அசத்தலான டிஸ்பிளே

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

தனித்துவமான சிப்செட்

தனித்துவமான சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் மாலி-ஜி76 3EEMC4 GPU ஆதரவும்உள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

அட்டகாசமான கேமரா வசதி

அட்டகாசமான கேமரா வசதி

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் சாதனம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 ஆடியோ ஜா

Hi-Res ஆடியோ டூயல்-ஸ்பீக்கர்கள், ஸ்பிளாஸ்-ப்ரூஃப் வடிவமைப்பு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

64ஜிபி மெமரி கொண்ட

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் சாதனத்தின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் சாதனத்தின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. மேலும் வரும் மே 18-ம் தேதி முதல் இந்த சாதனம் அமேசான்,மி.காம் போன்ற வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Redmi Note 10S Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X