பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் Redmi நோட் 10 எஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம்..
ரெட்மி நோட் 10 தொடரின் கீழ் சியோமியின் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி நோட் 10 எஸ் என்ற மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை பெட்டி, அதாவது ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் வைத்து விற்பனை செய்யப்படும் பாக்ஸின் புகைப்படம் சில முக்கிய விபரங்களுடன் டிவிட்டரில் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள சில முக்கிய விபரங்களை வைத்து இந்த ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ரெட்மி நோட் 10 எஸ் விரைவில் அறிமுகம்
ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் டீஸ் செய்யப்பட்ட விவரக்குறிப்புகள், உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 எஸ் மாடலுடன் ஒத்துப்போகின்றன, இது சியோமி நிறுவனத்தால் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே முக்கிய அம்சங்களுடன் இந்திய வேரியண்ட்டில் என்ன-என்ன முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று நிறுவனம் டீஸ் செய்துள்ளது என்று பார்க்கலாம். டீஸ் செய்யப்பட்ட விவரக்குறிப்புகளின் படி புதிய ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை கொண்டிருக்கும்.

ரெட்மி நோட் 10 எஸ் அறிமுக தேதி என்ன?
இந்த புதிய ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனானது வரும் 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது MIUI 12.5 இயங்குதளத்தில் இயங்கும் அண்ட்ராய்டு 11 ஐ கொண்டிருக்கும் என்று பாக்சில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ரெட்மி நோட் 10 எஸ், ப்ளூ, டார்க் க்ரெய் மற்றும் வைட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகின்றது என்று தெரிகிறது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 'சூப்பர் டிஸ்ப்ளே'வுடன் சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக ஹை-ரெஸ் ஆடியோ சான்றளிக்கப்பட்ட ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது என்பதைப் புகைப்படம் உறுதி செய்துள்ளது.

Redmi நோட் 10s ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ்
சமீபத்திய லீக் தகவலின் படி, Redmi நோட் 10s ஸ்மார்ட்போன் 6GB + 64GB, 6Gb + 128GB, மற்றும் 8GB + 128GB போன்ற மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பங்களில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 எஸ் கடந்த மார்ச் மாதம் மற்ற நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது 6.43 இன்ச் FHD + AMOLED பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெட்மி நோட் 10 எஸ் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா மற்றும் பேட்டரி விவரம்
இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த புதிய ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் சாதனம் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 13 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் AI Face Unlock ஐ ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications