மே 26: அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 10 அல்ட்ரா 5ஜி.!
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 10 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 26-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 10 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 அல்ட்ரா 5ஜி
ரெட்மி நோட் 10 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 10 அல்ட்ரா 5ஜி சிப்செட்
ரெட்மி நோட் 10 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1100 SoC சிப்செட் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதற்கு
முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10எஸ்
ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்றதிரைவிகிதம், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களைகொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 10எஸ் சிப்செட்
இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் மாலி-ஜி76 3EEMC4 GPU ஆதரவும் உள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 10எஸ் கேமரா
ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் சாதனம்.

ரெட்மி நோட் 10எஸ் பேட்டரி
இந்த புதிய ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Hi-Res ஆடியோ டூயல்-ஸ்பீக்கர்கள், ஸ்பிளாஸ்-ப்ரூஃப் வடிவமைப்பு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல். 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் சாதனத்தின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் சாதனத்தின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications