Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்: விலை மற்றும் அம்சங்கள்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடலை இன்று மதியம் 12 மணி அளவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட

அமேசான் தளத்தில் வெளிவந்த தகவலின்படி, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.11,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 மாடலை ரூ.13,999-விலையிலும் வாங்க முடியும்.

ரெட்மி நோட் 10

ரெட்மி நோட் 10

மேலும் இந்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன், வெள்ளை, கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 6.43-இன்ச் சூப்பர் AMOLED எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.43-இன்ச் சூப்பர் AMOLED எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் சூப்பர் AMOLED எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி லென்ஸ்

48எம்பி பிரைமரி லென்ஸ்

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு வீடியோ காலிங் வசதிக்கு என்றே 13எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 678 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 678 சிப்செட் வசதி

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 சிப்செட் வசதி மற்றும் அட்ரினோ 612ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

குறிப்பாக 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இணையம், கேமிங் உள்ளிட்ட அம்சங்களை அதிக நேரம் பயன்படுத்த முடியும். பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Sale Set in India on Today: Here the Price and Details! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X