Home
Mobile

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: உயர்ரக அம்சங்களோடு விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ!

ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்களோடு இந்தியாவுக்கு வர இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 சீரிஸ்

ரெட்மி நோட் 10 சீரிஸ்

ரெட்மி நோட் 10 தொடரை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 சீரிஸ்களை போன்றே நிலையான மற்றும் மாதிரிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளது.

ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ குறித்த சில அமைவுகளை கசிவுத் தகவலை டிப்ஸ்டரின் இஷான் அகர்வால் வெளிவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியான கசிவுத் தகவலின்படி, ரெட்மி நோட் 10 இந்திய சந்தையில் இரண்டு வெவ்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி, 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியோடு நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

மூன்று வெவ்வேறு மாடல்களில் ரெட்மி நோட் 10 ப்ரோ

மூன்று வெவ்வேறு மாடல்களில் ரெட்மி நோட் 10 ப்ரோ

அதேபோல் டிப்ஸ்டரின் இஷான் அகர்வாலின் கசிவு அறிக்கையின்படி, ரெட்மி நோட் 10 ப்ரோ மூன்று வெவ்வேறு மாடல்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வசதி ஆகிய ஹை எண்ட் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்

இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பல தளங்களின் மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் விரைவில் இந்த சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது. அதேபோல் ரெட்மி நோட் 10 ப்ரோ பிஐஎஸ் தரநிலை சான்றிதழ் இணையதளத்தில் கண்டுபடிக்கப்பட்டவுடன் இந்த சாதனம் விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பான டீசரை நிறுவனம் வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 108 எம்பி முதன்மை கேமரா

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 108 எம்பி முதன்மை கேமரா

அதேபோல் இதுவரை கசிந்த தகவலின்படி இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 732 ஜி செயலி மூலம் இயக்கப்படும் எனவும் இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 108 எம்பி முதன்மை கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 10, Redmi Note 10 Pro Going to Launch Soon in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X