Home
Mobile

இந்தமுறை மிஸ் பண்ணாதிங்க: ரெட்மி நோட் 10 ப்ரோ அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு!

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையானது மார்ச் 17 ஆம் தேதி நடந்தது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையானது மார்ச் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

ரெட்மி நோட் 10 தொடர் ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10 தொடர் ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10 தொடரில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கையில், இந்த தொடரில் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில், ரெட்மி நோட் 10 ப்ரோ அடிப்படை மாறுபாடான 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு மாடலின் விலை ரூ.15,999 ஆக இருக்கிறது.

6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் வேரியண்ட்

6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் வேரியண்ட்

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு மாடலின் விலை ரூ. 16,999 ஆகவும் இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு கொண்ட ஹைஎண்ட் மாடலின் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் எம்ஐ ஸ்டுடியோ ஸ்டோர்கள் மூலம் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் க்ளாசியல் ப்ளூ, விண்டேஜ் ப்ரான்ஜ் மற்றும் டார்க் நைட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ சலுகை விவரங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ சலுகை விவரங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை சலுகைகள் குறித்து பார்க்கையில், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் ஃபிளாஷ் விற்பனையில் குறிப்பிட்ட அளவு சாதனங்கள் மட்டுமே கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவை கொண்டிருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ கேமரா விவரங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ கேமரா விவரங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5020 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

5020 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான அம்சங்களோடு பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. சிறந்த அம்சங்களோடு குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Pro Smartphone Next Sale Date Announced: Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X