மிகவும் எதிர்பார்த்த ரெட்மி நோட் 10 ப்ரோ இன்று விற்பனைக்கு வருகிறது: என்ன விலை? என்னென்ன சலுகைகள்?

|

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைத்தளத்தில் வாங்க முடியும். மேலும் இப்போது ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 சீரிஸ்

ரெட்மி நோட் 10 சீரிஸ்

ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில், ரெட்மி நோட் 10 ப்ரோ அடிப்படை மாறுபாடான 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு மாடலின் விலை ரூ.15,999 ஆக இருக்கிறது.

 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு மாடலின் விலை ரூ. 16,999 ஆகவும் இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு கொண்ட ஹைஎண்ட் மாடலின் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் எம்ஐ ஸ்டுடியோ ஸ்டோர்கள் மூலம் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் க்ளாசியல் ப்ளூ, விண்டேஜ் ப்ரான்ஜ் மற்றும் டார்க் நைட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை சலுகைகள் குறித்து பார்க்கையில், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

மொத்தம் 18 நாடுகளின் 38 செயற்கைகோள்கள்: விண்ணில் செலுத்தி வீடியோ வெளியிட்ட ரஷ்யா!மொத்தம் 18 நாடுகளின் 38 செயற்கைகோள்கள்: விண்ணில் செலுத்தி வீடியோ வெளியிட்ட ரஷ்யா!

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவை கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தனக்கென்று சொந்த சமூக ஊடகத்தை ரெடி செய்யும் டிரம்ப்.. பேஸ்புக், இன்ஸ்ட்டா, டிவிட்டர் எல்லாம் இனி காலி..தனக்கென்று சொந்த சமூக ஊடகத்தை ரெடி செய்யும் டிரம்ப்.. பேஸ்புக், இன்ஸ்ட்டா, டிவிட்டர் எல்லாம் இனி காலி..

5020 எம்ஏஎச் பேட்டரி

5020 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான அம்சங்களோடு பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. சிறந்த அம்சங்களோடு குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Pro Sale Set in India on Today: Here the Price and Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X