Home
Mobile

விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை விலைகுறைப்புடன் மி.காம் வலைத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி 2000 ரூபாய் வரை ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது என டெலிகாம்டாக் வலைத்தளம் தகவலை வெளியிட்டுள்ளது.

 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி

தற்சமயம் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். மேலும்
இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.16,999-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டவேரியண்ட் ரூ.18,999-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ரோ அம்சங்கள் குறித்து

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த
ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவை கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனானது நான்கு

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச்

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான அம்சங்களோடு பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. சிறந்த அம்சங்களோடு குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5

இரட்டை சிம் 4ஜி, வைஃபை 6 802.11 ax, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Pro now on open sale in India and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X