நல்ல வாய்ப்பு, அட்டகாச தள்ளுபடி: அமோக வரவேற்பு பெற்ற ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் வாங்க சரியான நேரம்!
ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ரெட்மி நோட் 10 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதன்மை மாடலாக ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனம் இருக்கிறது. இது தற்போது அமேசானில் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்துக்கு தள்ளுபடி அமேசான் இணையதளத்தில் அதிகாரப்பூரவமாக கிடைக்கிறது. தற்போது 8 ஜிபி ரேம் மாடலுக்கு மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 6 ஜிபி ரேம் மாறுபாடு அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போனை ரூ.1500 என்ற தள்ளுபடி விலையில் பெறலாம். இந்த தள்ளுபடி சலுகையானது எச்டிஎஃப்சி வங்கி அட்டை பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

தள்ளுபடி விலையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் தற்போது தள்ளுபடியில் கிடைக்கிறது. மேலும் அமேசானில் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்தை கட்டணமில்லா இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி ரூ.3000-க்கு மேல் ஆர்டர்கள் வாங்கும் போது கட்டணமில்லா இஎம்ஐ விருப்பத்தை வழங்குவதாக அமேசான் அறிவித்திருக்கிறது. மேலும் இஎம்ஐ சலுகையானது ரூ.1036 என்ற விலை முதல் தொடங்குகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 6 மாத இலவச டிஸ்ப்ளே மாற்றம் சலுகையும் கிடைக்கிறது. கூடுதலாக, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 6 மாத இலவச திரை மாற்றத்துடன் கிடைக்கிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் டார்க் நைட், க்ளாசியல் ப்ளூ மற்றும் விண்டேஜ் ப்ரான்ஸ் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 108 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி நான்காம் நிலை கேமராக்கள் ஆகியவை உள்ளது. அதேபோல் 16 எம்பி செல்பி கேமரா வசதி இதில் இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை உள்ளது.


Click it and Unblock the Notifications