ஆன்லைனில் லீக்கான ரெட்மி நோட் 10 ப்ரோ சிறப்பம்சங்கள்: இந்தியாவில் வெளியாகுமா?

|

சியோமியின் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் களமிறங்க உள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் முன்னதாகவே வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10 ப்ரோ

சியோமி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 10 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் நோட் 10 ப்ரோ எஃப்சிசியில் காணப்படுகிறது.

ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே அம்சம்

ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே அம்சம்

ரெட்மி நோட் 10 ப்ரோ மாதிரி எண் M2101K6G உடன் காணப்படுகிறது. சியோமி யுஐ டெலிகிராம் பயனரிடம் இருந்து இந்த தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 732ஜி மூலம் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

இரண்டு முதன்மை சென்சார் கேமரா

இரண்டு முதன்மை சென்சார் கேமரா

ரெட்மி நோட் 10 ப்ரோ 64 மெகாபிக்சல் கொண்ட 2 முதன்மை சென்சார் கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. 64 மெகாபிக்சல் சாம்சங் எஸ் 5 மற்றும் 64 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் என்ற இரண்டு கேமரா பொருத்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

5050 எம்ஏஎச் பேட்டரி

5050 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கக்கூடும். எஃப்சிசி பட்டியல் எண்ணை டிப்ஸ்டர் சிம்ரல் பால் கண்டுபிடித்துள்ளார். மேலும் இதுகுறித்து தெரிவித்த மற்றொருவரான டிப்ஸ்டர் சுதான்ஷு, ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி அம்சம் கொண்டிருக்கும் என உறுதியாக தெரிவிக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல்

இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல்

அதேபோல் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் ரெட்மி நோட் 10 ப்ரோ ஐஎம்இஐ எண் முன்னதாகவே இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என டிப்ஸ்டர் முகுல்சர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 10 Pro Leaked: Should You Like It

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X