ரெட்மி நோட் 10 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம்.. வெளியான டிப்ஸ்டர் தகவல்..
சியோமி நிறுவனம் விரைவில் இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் பல சான்றிதழ் வலைத்தளங்களில் வரவிருக்கும் தொலைப்பேசி பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 10 ப்ரோ
ரெட்மி நோட் 10 ப்ரோ எஃப்.சி.சி இணையதளத்தில் மாடல் எண் M2101K6G உடன் வெளிவந்துள்ளது. இந்த தொலைபேசி ஐரோப்பிய பொருளாதார ஆணையம், சிங்கப்பூரின் ஐஎம்டிஏ மற்றும் மலேசியாவின் எம்சிஎம்சி வலைத்தளங்களிலும் காணப்பட்டுள்ளது. FCC சான்றிதழை இருந்தது காணப்பட்ட போனில் 5G, டூயல் பேண்டு Wi-Fi, NFC, ப்ளூடூத், MIUI 12 போன்ற அம்சங்கள் இருப்பதாக சிம்ரன் பால் சிங் என்ற டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்மார்ட்போன் மாடல் எண் M2101K6G
வலைத்தளத்தில் காணப்படும் பட்டியலில் சாதனத்தின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை, ஆனாலும், இது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் தான் என்பதை FCC இயக்க லீக்ஸ்டர் சுடன்ஷு அம்போர் என்பவர், இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் M2101K6G உடன் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவும் ட்விட்டரில் அதே மாடலுக்கான IMEI எண் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம்
ஆகையால், விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை இந்த தகவல்கள் இப்பொழுது உறுதிப்படுத்தியுள்ளது. நினைவுகூர, சியோமி சமீபத்தில் ரெட்மி நோட் 9 மற்றும் 9 ப்ரோ மாடல்களின் 5 ஜி பதிப்புகளை சீனாவில் அறிமுகப்படுத்தியது.

ரெட்மி நோட் 9 5 ஜி
ரெட்மி நோட் 9 5 ஜி போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் தோராயமாக ரூ .14,599 என்ற விலையிலும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மடல் தோராயமாக ரூ. 16,850 என்ற விலையிலும், 8 ஜிபி + 256 ஜிபி மாடல் தோராயமாக ரூ. 19,099 விலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications