ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடல் ஆனது அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2,400x1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

குறிப்பாக ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

Dimensity 1100 SoC சிப்செட் வசதி
இந்த புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1100 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

64எம்பி பிரைமரி கேமரா
இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5ஜி எஸ்ஏ /என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி 3.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின்
ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.18,200-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications