ரெட்மி நோட் 10 விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

|

ரெட்மி நோட் 10 விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் முன்னணி நிறுவனமாக சியோமி

இந்தியாவில் முன்னணி நிறுவனமாக சியோமி

சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தனி ரசிகர்களே உள்ளனர். 2014 ஆம் ஆண்டு ரெட்மி நோட் 3 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் அதிக விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இது இடம்பெற்றது.

ரெட்மி நோட் 9 தொடருக்கு அமோக வரவேற்பு

ரெட்மி நோட் 9 தொடருக்கு அமோக வரவேற்பு

தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி இடங்களை கைப்பற்றியது. அதேபோல் 2020-ல் விற்பனை தொடங்கப்பட்ட ரெட்மி நோட் 9, ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களும் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.

ரெட்மி நோட் 10 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ரெட்மி நோட் 10 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ரெட்மி நோட் 10 க்யூ 1 2021 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களை போன்றே ரெட்மி நோட் 10 மீடியா டெக் அல்லது மிட் ரேஞ்ச் செயலி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கூடுதல் சுவாரஸ்ய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக புதுப்பிப்பு வீதக் காட்சி

அதிக புதுப்பிப்பு வீதக் காட்சி

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் அதிக புதுப்பிப்பு வீதக் காட்சியுடன் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாகவே போக்கோ மற்றும் எம்ஐ மோனிக் ஆகியவற்றில் அதிக புதிப்பிப்பு வீத காட்சிகளை அறிமுகம் செய்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும்  64 ஜிபி உள்சேமிப்பு

4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு

5ஜி அம்சங்கள் கொண்ட பல ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது. அந்த பதிப்பில் இது இடம்பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்க வாய்ப்புள்ளது. இதில் குறைந்தபட்சம் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் கூடிய 5 ஜிபி சிப்செட் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 பதிப்புக்கு வாய்ப்பு

ஆண்ட்ராய்டு 11 பதிப்புக்கு வாய்ப்பு

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 பதிப்புடன் வெளிவர வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் நாட்களில் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆண்ட்ராய்டு 13-க்கான புதுப்பிப்புகளை பெறலாம். ரெட்மி நோட் 10 சுமார் ரூ.11,000 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ சுமார் ரூ.15,000 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 10 May Launching Soon: Expected Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X