Home
Mobile

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் விலை உயர்வு.! முழு விவரம்.!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது இத்துடன் நான்காவது முறை விலை உயர்வை சந்திக்கிறது இந்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன். இந்த முறையும் ரூ.500 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 10

ரெட்மி நோட் 10

வெளிவந்த தகவலின்படி, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 விலை உயர்த்தப்பட்டு ரூ.13,499-விலையில் விற்பனை செய்யப்படுகறது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 மாடலுக்கு ரூ.500 விலை உயர்த்தப்பட்டு ரூ.15,499-விலையில்விற்பனை செய்யப்படுகிறது.

 ரெட்மி நோட் 10டி 5ஜி

ரெட்மி நோட் 10டி 5ஜி

அதேபோல் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்போது ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்போதுரூ.16,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 10டி

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்ற பல்வேறு சிறப்பான அம்சஙகைள கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரெட்மி நோட் 10டி 5

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 மிமீ ஆடியோ ஜாக் போன்ற ப

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Gets price hike again! Full details.!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X