விஷயம் தெரியுமா? இனி Redmi Note 10 வாங்க வெயிட் பண்ண வேண்டிய தேவையில்லை..

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தற்பொழுது அதன் ரெட்மி நோட் 10 (Redmi Note 10) ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விற்பனையை இந்தியாவில் எப்பொழுதும் கிடைக்கும் படி செய்துள்ளது. அதாவது, நிறுவனம் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் சாதனத்தின் ஓபன் சேல்ஸ் விற்பனையைத் துவங்கியுள்ளது. இனி இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் நினைத்த நேரத்தில் வாங்க முடியும். அதாவது வாரத்தின் எந்த நாளிலும் நீங்கள் இப்போது இந்த சாதனத்தை வாங்கலாம்.

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்

ரெட்மி இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் ஓபன் சேல்ஸ் விற்பனை துவங்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், இப்போது ஃபிளாஷ் விற்பனைக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை, மேலும் ஸ்மார்ட்போன் 24x7 நேரமும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிகளில் வாங்கக் கிடைக்கிறது. ட்வீட் படி, ரெட்மி நோட் 10 இன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அமேசான் இந்தியா, mi.com, Mi ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் சில்லறைக் கடைகள் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும்.

Redmi Note 10 ஸ்டோரேஜ்

Redmi Note 10 ஸ்டோரேஜ்

Redmi Note 10 ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் வகைகளில் விற்பனைக்கு வருகிறது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் ஒரு மாடலாகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் மற்றொரு மாடலாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

பூமியை நோக்கி வரும் பூமியை நோக்கி வரும் "அபாயகரமான சிறுகோள்".. இதனால் நமக்கு ஆபத்தா நாசா என்ன சொல்கிறது?

ரெட்மி நோட் 10 விலை

ரெட்மி நோட் 10 விலை

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வெறும் ரூ .11,999 விலையில் கிடைக்கிறது. அதேபோல், ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ .13,999 விலையில் கிடைக்கிறது. இது அக்வா கிரீன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷாடோவ் பிளாக் வண்ணங்களில் வருகிறது.

Redmi Note 10 சிறப்பம்சம்

Redmi Note 10 சிறப்பம்சம்

ரெட்மி நோட் 10 கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உடன் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்பலிங் விகிதத்துடன் 6.43 இன்ச் எஃப்.எச்.டி சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடிய 5,000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஹை-ரெஸ் ஆடியோ டூயல்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்பிளாஸ்-ப்ரூஃப் டிசைன், இசட்-ஆக்சிஸ் ஹாப்டிக்ஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவை உள்ளது.

உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?

குவாட் கேமரா அமைப்பு

குவாட் கேமரா அமைப்பு

இந்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் 2.2Ghz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 இயங்குதளத்தில் இயங்குகிறது. கேமரா விருப்பங்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 10 ஸ்மார்ட் போன் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

கேமரா விருப்பம்

கேமரா விருப்பம்

இது 48MP சோனி IMX582 பிரைமரி சென்சார் உடன், 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், இது 13MP செல்ஃபி ஷூட்டரை பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவில் வைத்திருக்கிறது. புதிதாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் நபர்கள் இந்த Redmi Note 10 ஸ்மார்ட்போன் மாடலை வாங்கி பயன்பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 10 6GB variant is now available for open sale in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X