மொபைல் மார்க்கெட்டின் புதிய ராஜா.. சூப்பர் பட்ஜெட்டில் 5ஜி, 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, IP64 ரேட்டிங்!
சீன நிறுவனமான ரெட்மி "எப்போவுமே நான் தான் பட்ஜட்-விலை 5ஜி போன் மார்க்கெட்டின் கிங்" என்று நிரூபிக்கும் வண்ணம்.. ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இம்மாத தொடக்கத்தில் வந்த ரெட்மி 15C 4ஜி (Redmi 15C 4G) மாடலின் 5ஜி வேரியண்ட் ஆகும்.
4ஜி மாடலில் நாம் பார்த்த அதே வடிவமைப்பை பெற்றிருந்தாலும் கூட, இதில் சற்றே பெரிய பேட்டரி மற்றும் 5ஜி கனக்டிவிட்டி (புதிய சிப்செட்) சேர்க்கப்பட்டுள்ளது. போலந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஹங்கேரியில் ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ரெட்மி 14சி 5ஜி (Redmi 4C 5G) இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை (Redmi 15C 5G Price): இந்த ஸ்மாட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.15,600 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் போது இதன் விலை இன்னும் குறைவாக இருக்கலாம். ஏனென்றால் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் வெறும் ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Redmi 15C 5G Specifications): முன்னரே குறிப்பிட்டபடி 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களுக்கு இடையிலான முக்கிய மாற்றம் - சிப்செட் தான். ரெட்மி நிறுவனம் - பழைய ஹீலியோ G81 அல்ட்ரா சிப்செட்டை தூக்கிவிட்டு மீடியாடெக்கின் டைமன்சிட்டி 6300 சிப்செட்டை (MediaTek Dimensity 6300 Chipset) சேர்த்துள்ளது
இது 6என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது, 2.4GHz இல் இரண்டு பெர்பார்மென்ஸ் கோர்களும் 2.0GHz இல் ஆறு பெர்பார்மென்ஸ் கோர்களும் உள்ளன. இது ஒரு பவர்ஹவுஸ் அல்ல, ஆனால் குறைந்த சக்தியை பயன்படுத்தி தினசரி மொபைல் பயன்பாடுகள் மற்றும் லைட் கேம்களை சிறப்பாக இயக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை (120Hz LCD Display) கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 50எம்பி பிரைமரி சென்சார் உள்ளது மற்றும் முன் பகுதியில் 8எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது
பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் 33W சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரியும் உள்ளது. ஆனால் ஸ்மார்ட்போன் ரீடெயில் பாக்ஸில் எந்த சார்ஜரும் சேர்க்கப்படவில்லை. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஐபி64 ஸ்பிளாஸ் ப்ரொடெக்ஷன் (IP64 Splash Protection), சில பகுதிகளில் என்எப்சி (NFC), ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ரீடர் ஆகியவைகளை கொண்டுள்ளது
4ஜி மாடலை பார்த்த எவருக்கும் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு முற்றிலும் புதிய மாடல் ஆக தோன்றாமல் இருக்கலாம். ஆனால் வலுவான பேட்டரி லைஃப் கொண்ட மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை தேடும் எவருக்குமே இது ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்திய அறிமுகம் குறித்துஏதேனும் தகவல் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
ரெட்மி தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை ஷாவ்மீ அதன் வருடாந்திர "தீபாவளி வித் சியோமி 2025" பண்டிகை விற்பனை தேதியை அறிவித்துள்ளது. இது வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளது. இதன்கீழ் ஷாவ்மீ மற்றும் ரெட்மி பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், பவர் பேங்குகள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் இயர்பட்ஸ்கள் ஆனது டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








