Home
Mobile

ஆளுக்கு 1 தூக்கும் பட்ஜெட்டில்.. 6000mAh பேட்டரி உடன் புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரூ.9,999 என்கிற பட்ஜெட் விலையில் அறிமுகமாகி, இந்திய சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போட்ட ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஸ்மார்ட்போனின் "அப்கிரேடட் வெர்ஷன்" அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. அது ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.

ரெட்மி 15சி ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (சரியான வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படலாம்). இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ளதை உறுதிப்படுத்தும்படி, ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்மற்றும் அவைகளின் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

 6000mAh பேட்டரி உடன் புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்வின் கூற்றுப்படி, ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.11,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த விலையை ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒப்பிட்டு பார்த்தால், சுமார் ரூ.1,500 விலை உயர்வு இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

மேலும் ரெட்மி 15சி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆகிய ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படலாம். அவைகள் முறையே ரூ.12,500 மற்றும் ரூ.14,500 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம் என்று கூறப்படுகிறது. இதுவொன்றும் இறுதி விலை இல்லை என்பதால், அதிகாரப்பூர்வ விலை சற்று முன்-பின் இருக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டால் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் பட்ஜெட் பிரிவில் (ரூ.10,000 க்கும் குறைவான விலை கொண்ட போன்களில்) ஒரு பிரபலமான தேர்வாகும்.
இதுதவிர்த்து ரெட்மி 15சி மாடலில் HD+ நாட்ச் டிஸ்பிளே மற்றும் 6,000mAh பேட்டரி ஆகியகளை எதிர்பார்க்கலாம்.

ரெட்மி 14சி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 720 x 1640 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்பளிங் ரேட் மற்றும் 450நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் ஹீலியோ ஜி81 சிப்செட் (MediaTek Helio G81) மூலம் இயக்கப்படுகிறது.

இது 8ஜிபி வரையிலான LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256ஜிபி வரையிலான eMMC 5.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக மேலும் விரிவாக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி 14சி ஸ்மார்ட்போனில் எப்/1.8 அபெக்ஷர் உடனான 50 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இரண்டாவது கேமரா - பெயர் குறிப்பிடப்படாத லென்ஸ் ஆக உள்ளது. முன்பக்கத்தில் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் ஆனது 5160எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 4ஜி LTE, ப்ளூடூத் 5.4, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ் 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. போர்ட்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, இது ஆம்பியண்ட் லைட் சென்சார், ஆக்சலரோமீட்டர், விர்ச்சுவல் ப்ராக்சிமிட்டி சென்சார் மற்றும் இ-காம்பஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டு உள்ளது. கடைசியாக, அளவீடுகளில் இது 171.88 x 77.8.8.22 மிமீ உள்ளது மற்றும் எடையில் (கலர் ஆப்ஷன்களை பொறுத்து) 207 கிராம் முதல் 211 கிராம் வரை மாறுபடுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi New 5G Phone Redmi 15C Price in India Will be Slightly Higher Than Redmi 14C Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X