இப்போ 6ஜிபி ரேம் மட்டுமில்ல 8ஜிபி ரேம் சாதனமும் வருவதாம்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி நோட் 10எஸ்!

|

ரெட்மி நோட் 10எஸ் விரைவில் இந்திய சந்தையில் ஒரு புதிய மாறுபாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சியோமி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் கொண்ட ஒரே வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது காஸ்மிக் பர்பில், ஃப்ரோஸ்ட் ஒயிட், டீப் சீ ப்ளூ மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ரெட்மி ஸ்மார்ட்போனின் புதிய ரேம் மாறுபாட்டை நிறுவனம் கொண்டு வரும் என தற்போது தகவல்கள் தெரிவிக்கிறது. ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. அதற்கு ஏற்ப ரெட்மி நிறுவனம் வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ரெட்மி நோட் 10 எஸ் புதிய மாறுபாடு

ரெட்மி நோட் 10 எஸ் புதிய மாறுபாடு

ரெட்மி நோட் 10 எஸ் புதிய மாறுபாடு மைஸ்மார்ட்பிரைஸ் அறிக்கையின்படி, 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாட்டை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவிக்கிறது. முன்னதாக கிடைக்கும் 6 ஜிபி ரேம் வேரியண்ட் உடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் என கிடைக்கப்படுகிறது. அதேபோல் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள புதிய மாறுபாடானது 64 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதிய 8ஜிபி ரேம் வேரியண்ட் விலை விவரம்

புதிய 8ஜிபி ரேம் வேரியண்ட் விலை விவரம்

தற்போதைய 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் கொண்ட ரெட்மி நோட் 10 எஸ் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.16,499 ஆக இருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது புதிய மாறுபாடானது 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடனும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடனும் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,999 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18,499 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் ரெட்மி ஸ்மார்ட்போனின் வரவிருக்கும் மாடல்கள் குறித்து நிறுவனத்திடம் இருந்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

இரட்டை சிம் (நானோ) ரெட்மி நோட் 10 எஸ் ஆண்ட்ராய்டு 11 ஐ MIUI 12.5 உடன் இயங்குகிறது. இது 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் 1,080 x 2,400 பிக்சல்கள் AMOLED டிஸ்ப்ளே, 1100 நைட்ஸ் பீக் பிரைட்னெஸ், 4,500,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, SGS லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் 6 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128 ஜிபி வரை UFS 2.2 சேமிப்பகத்துடன் வருகிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

ரெட்மி நோட் 10 எஸ் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். போன் 13 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் துளையுடன் மையமாக அமைந்துள்ள துளை-பஞ்ச் கட்அவுட்டில் அமைந்துள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5,000 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 2400 x 1080 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் மெமரி விரிவாக்க வசதிக்கு என மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக மே மாதத்தில் டீப் சீ ப்ளூ, ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் வண்ணங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமீபத்தில் பட்டையை கிளப்பும் புதிய காஸ்மிக் பர்பிள் வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் எஸ்ஜிஎஸ் லோ ப்ளூ லைட் சான்றிதழ் உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 எஸ்ஓசி மாலி ஜி76 எம்சி 4 ஜிபியு, 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

இமேஜிங் ஆதரவுக்கு என ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. நீங்கள் பட்ஜெட் விலையில் 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த சாதன வருகைக்கு காத்திருந்து வாங்கலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Might Launching Soon its Redmi Note 10S Smartphone 8GB RAM Variant in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X