Home
Mobile

ரெட்மி அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 7900mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி எம்100 (Redmi M100) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ரெட்மி எம்100 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி எம்100 அம்சங்கள் (Redmi M100 Specifications): 6.9-இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் ரெட்மி எம்100 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1,600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz Touch sampling rate), 825 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ரெட்மி அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்..  எந்த மாடல்?

ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் (octa-core 4nm Snapdragon 4 Gen 5 chipset) உடன் ரெட்மி எம்100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ ஜிபியு ( Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி எம்100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் ரெட்மி எம்100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

7900எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி எம்100 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ரெட்மி அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்..  எந்த மாடல்?

5ஜி, வைஃபை 802.11, கலிலியோ (GALILEO), ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 232 கிராம் ஆகும். மிட்நைட் பிளாக், ஸ்டாரி ஒயிட், வைல்டர்னஸ் கிரீன் ஆகிய கலர்களில் ரெட்மி எம்100 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack)போன்ற வசதிகளும் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன. மேலும் ரெட்மி எம்100 போனின் ஆரம்ப விலை CNY 1,999 (இந்திய மதிப்பில் ரூ.28,000)-ஆக உள்ளது. தற்போது இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
Redmi M100 with 7900mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X