புதுசு கண்ணா புதுசு: ரெட்மி நோட் 10எஸ் 8 ஜிபி ரேம் வேரியண்ட் அறிமுகம்- அமேசான் தளத்தில் வாங்கலாம்!

|

சியோமி இந்தியா ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.18,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பில் மற்றும் டீப் சீ ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்ஐ.காம், எம்ஐ ஹோம் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்

ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்கள் பிளாட் ரூ.1000 தள்ளுபடியை பெறலாம். இதன்மூலம் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனை ரூ.17499 ஆக பெறலாம். ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. ஐசிஐசிஐ கார்டு மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது இதை ரூ.13,999 என வாங்கலாம்.

8 ஜிபி ரேம் வேரியண்ட்

8 ஜிபி ரேம் வேரியண்ட்

ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.16,499 ஆக இருந்த நிலையில் வங்கி சலுகையுடன் இந்த சாதனத்தை ரூ.15499 என வாங்கலாம். கூடுதலாக ரூ.2000 செலுத்தும் பட்சத்தில் கூடுதல் 2ஜிபி ரேம் ஸ்மார்ட்போனை வாங்கலாம். அதாவது ரூ.2000 கூடுதலாக செலுத்தினார் 8 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனை வாங்கலாம். அதேபோல் ரூ.500 கூடுதலாக செலுத்தினால் ரெட்மி நோட் 10 ப்ரோ சாதனத்தை வாங்கலாம். இந்த சாதனம் சிறந்த கேமரா தர ஆதரவோடு 120 ஹெர்ட் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே இரட்டை சிம் (நானோ) ரெட்மி நோட் 10 எஸ் ஆண்ட்ராய்டு 11 ஐ MIUI 12.5 உடன் இயங்குகிறது. இது 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் 1,080 x 2,400 பிக்சல்கள் AMOLED டிஸ்ப்ளே, 1100 நைட்ஸ் பீக் பிரைட்னெஸ், 4,500,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, SGS லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் 6 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128 ஜிபி வரை UFS 2.2 சேமிப்பகத்துடன் வருகிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

ரெட்மி நோட் 10 எஸ் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். போன் 13 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் துளையுடன் மையமாக அமைந்துள்ள துளை-பஞ்ச் கட்அவுட்டில் அமைந்துள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5,000 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 2400 x 1080 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் மெமரி விரிவாக்க வசதிக்கு என மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக மே மாதத்தில் டீப் சீ ப்ளூ, ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் வண்ணங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமீபத்தில் பட்டையை கிளப்பும் புதிய காஸ்மிக் பர்பிள் வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் எஸ்ஜிஎஸ் லோ ப்ளூ லைட் சான்றிதழ் உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 எஸ்ஓசி மாலி ஜி76 எம்சி 4 ஜிபியு, 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இமேஜிங் ஆதரவுக்கு என ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. நீங்கள் பட்ஜெட் விலையில் 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த சாதன வருகைக்கு காத்திருந்து வாங்கலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Launched its Redmi Note 10S Smartphone's 8GB RAM Variant: You Can Buy via Amazon with offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X