Home
Mobile

நாளை களமிறங்கும் புதிய Redmi போன்கள்.. 7560mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் நாளை (அக்டோபர் 23) ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ( (Redmi K90 Pro Max) மற்றும் ரெட்மி கே90 (Redmi K90) ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டு போன்களின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி கே90 அம்சங்கள் (Redmi K90 specifications): 6.59-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி கே90 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

நாளை களமிறங்கும் புதிய Redmi போன்கள்.. 7560mAh பேட்டரி.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் வசதியும் ரெட்மி கே90 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் 16ஜிபி ரேம், 7100mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், Bose டூயல் ஸ்பிக்கர்கள், ஹைப்பர்ஓஎஸ் 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும்.

ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Redmi K90 Pro Max specifications): 7560mAh பேட்டரி வசதியுன் இந்த ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.

இதுதவிர 100W பிபிஎஸ் சார்ஜிங் நெறிமுறை (PPS charging protocol) மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் (Reverse wireless charging) ஆதரிக்கும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்.

6.9-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. அதேபோல் ஹைப்பர்ஓஎஸ் 3.0 ஓஎஸ் (HyperOS 3.0 OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) கொண்டு இயங்கும் மற்றும் கிராபிக்ஸ் செயல்திறனுக்காக டி2 சிப்பை நம்பியிருக்கும். அதுவும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த ரெட்மி போன் அறிமுகமாகும்.

நாளை களமிறங்கும் புதிய Redmi போன்கள்.. 7560mAh பேட்டரி.. எந்த மாடல்?

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் போன் ரூ.89,990 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K90 with 7100mAh battery to be launched in China tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X