மொத்தமும் மிரளுது.. 100W சார்ஜிங்.. 7100mAh பேட்டரி.. OIS கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் மாடலான ரெட்மி கே90 (Redmi K90) களமிறங்கி இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 7100mAh பேட்டரி, ஓஐஎஸ் கேமரா, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மட்டுமல்லாமல் போஸ் ஆடியோ கொடுக்கிறது. 22.5W ரிவர்ஸ் சார்ஜிங், ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட இந்த ரெட்மி கே90 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ரெட்மி கே90 மற்றும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் (Redmi K90 Pro Max) ஆகிய மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு ரெட்மி கே90 வெளியாகி இருக்கிறது. இதில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பெரிய பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. இதனால், இந்தியாவிலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

ரெட்மி கே90 அம்சங்கள் (Redmi K90 Specifications): 6.59 இன்ச் (2510 x 1156 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஹைப்பர்ஓஎஸ் 3.0 (HyperOS 3.0) கிடைக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் கிடைக்கிறது.
இந்த ரெட்மி கே90 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் லைட் ஹண்டர் 800 (Light Hunter 800) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் ஓவி08எப் (OV08F) சென்சார் மற்றும் டெலிபோட்டோவில் ஓவி50எம் (OV50M) சென்சார் கிடைக்கிறது.

ஓம்னிவிஷன் ஓவி20பி40 (OmniVision OV20B40) சென்சாருடன் 20 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7100mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஹை-ரெஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், போஸ் டியூனிங் கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,044ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,743ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,442ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,141ஆக இருக்கிறது.
16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.49,306ஆக இருக்கிறது. இந்த விலைகள் சீனாவில் நிர்ணயிக்கப்பட்டவையாகும். குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாகும்போது மாறுதல்கள் இருக்கும். லைட் பர்பிள், அக்வா ப்ளூ, பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் கிடைக்கிறது. சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications








