ரெட்மி அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8550mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே90 அல்ட்ரா (Redmi K90 Ultra) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இன் பில்ட் ஆக்டிவ் கூலிங் ஃபேன் உடன் இந்த போன் வெளியாகி உள்ளது. மேலும் இது வெப்பநிலையை 10°C வரை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
ஆகவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாடும்போது செயல்திறன் குறையாது என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் கேமிங்கிற்காக தனியாக D2 இன்டர்போலேஷன் சிப்பும் இந்த போனில் உள்ளது. இப்போது ரெட்மி கே90 அல்ட்ரா போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி கே90 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K90 Ultra Specifications): 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1280x2772 பிக்சல்ஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் இந்த போன் வெளியாகி உள்ளது. ஆகவே இந்த போனில்
வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.
ஆனாலும் அந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி Light Hunter 800 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன். இந்த ரியர் கேமராக்கள் மூலம் 8கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் ரெட்மி கே90 அல்ட்ரா போனில் உள்ளது. அதேபோல் 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) உடன் இந்த ரெட்மி கே90 அல்ட்ரா மாடல் அறிமுகமாகும்.
8550எம்எஏச் பேட்டரி உடன் ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
ஸ்பேஸ் சில்வர், ஷேடோ பிளாக் மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும். 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

ரெட்மி கே90 அல்ட்ரா விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 அல்ட்ரா மாடலின் விலை 2,799 yuan (இந்திய மதிப்பில் ரூ.38,997)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 அல்ட்ரா மாடலின் விலை 2,799 yuan (இந்திய மதிப்பில் ரூ.38,997)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 அல்ட்ரா மாடலின் விலை 3,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.45,963)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 அல்ட்ரா மாடலின் விலை 3,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.48,761)-ஆக உள்ளது.
விரைவில் இந்த புதிய ரெட்மி போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications