ருத்ர தாண்டவம் ஆடும் புது Redmi போன்.. 8550mAh பேட்டரி, 100W சார்ஜிங், 165Hz ஸ்மூத் டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஜூன் 30 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள அறிமுக விழாவிற்கு முன்னதாக, ரெட்மி நிறுவனம், அந்நாளில் அறிமுகம் செய்யவுள்ள ரெட்மி கே90 அல்ட்ரா (Redmi K90 Ultra) ஸ்மார்ட்போனை குறித்த முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ளது. உறுதி செய்யப்பட்ட அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இந்த ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் கேமிங் செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சீன அறிமுகத்த தொடர்ந்து ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா உட்பட மற்ற உலகளாவிய சந்தைகளில் போக்கோ பிராண்டிங்கின் கீழ் போக்கோ எப்8 அல்ட்ரா POCO F8 Ultra) என்கிற மாடல் பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியர்களும் கூட இந்த ஸ்மார்ட்போனின் மீது ஒரு கண் வைக்கலாம்.

ரெட்மி கே90 அல்ட்ராவில் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள்: ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஸ்லிம் ஆன பெஸல்கள் (bezels) மற்றும் வட்டமான மூலைகளுடன் கூடிய 6.83 இன்ச் பிளாட் டிஸ்பிளே (flat display) இடம்பெறும் என்பதை ரெட்மி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளே 165Hz ரெஃப்ரெஷ் ரேட்டை (refresh rate) ஆதரிப்பதுடன், எம்10 டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது மற்றும் அதிகபட்சமாக 3500 நிட்ஸ் (nits) ப்ரைட்னஸ்-ஐ எட்டும் திறனையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஷாவ்மீயின் Qingshan கண் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் கேமிங் டச் மேம்பாடுகளும் (gaming touch enhancements) உள்ளன. ரெட்மி நிறுவனத்தின் தகவலின்படி, 40-க்கும் மேற்பட்ட கேம்கள் 165fps வேகத்தில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன; இது வரவிருக்கும் இந்த கேமிங் போனின் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்றாக அமைகிறது.
ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 16 சதவீத சிலிக்கான் கண்டென்ட்டை கொண்ட 8,550mAh திறன் கொண்ட Xiaomi Jinshajiang பேட்டரி இடம்பெறவுள்ளது. இதன் சார்ஜிங் வசதிகளில் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் கேமிங்கின் போது வெப்ப உற்பத்தியைக் குறைக்க உதவும் 'மதர்போர்டு பைபாஸ் சார்ஜிங்' (motherboard bypass charging) ஆகியவை அடங்கும்.
மேலும், லேண்ட்ஸ்கேப் (கிடைமட்ட) நிலையில் சிறந்த நெட்வொர்க் இணைப்புக்கான மேம்பாடுகள் மற்றும் பிரத்யேக கேமிங் ஆடியோ அம்சங்கள் இருப்பதையும் ரெட்மி உறுதிப்படுத்தியுள்ளது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆனது டி2 பிரத்யேக கேமிங் டிஸ்ப்ளே சிப்புடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆற்றலளிக்கிறது.
ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மி கே90 மேக்ஸில் உள்ள ஆக்டிவ் கூலிங் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. இதில் மெட்டல் பேரிங்குகள் கொண்ட 18.1மிமீ கூலிங் ஃபேன் அடங்கும். இந்த கூலிங் சிஸ்டம், 100 வினாடிகளுக்குள் வெப்பநிலையை 10 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும் என்றும், ஃபேன் சத்தத்தை சுமார் 32dB அளவில் பராமரிக்கும் என்றும் ரெட்மி கூறுகிறது.
பில்ட்இன் ஃபேன் இருந்தபோதிலும், இந்த ஸ்மார்ட்போன் IP68 மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறனை தக்க வைத்து கொண்டுள்ளது. ஸ்பேஸ் சில்வர் வேரியன்ட் ஆனது, ரெட்மி கே90 மேக்ஸை மிகவும் ஒத்திருக்கும் வகையில், அனோடைஸ்டு ஃபினிஷ் கொண்ட அலுமினியம் சிஎன்சி ஃபிரேமைக் கொண்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் ஆகியவைகளும் உறுதிப்படுத்தப்பட்ட மற்ற அம்சங்களின் பட்டியலில் உள்ளது
ஹார்டுவேரை குறைப்பதற்குப் பதிலாக, ரெட்மி தனது கிட்டத்தட்ட அனைத்து ஃபிளாக்ஷிப் கேமிங் அம்சங்களையும் அப்படியே தக்கவைத்துக்கொண்டு, ரெட்மி கே90 அல்ட்ராவை முக்கியமாக அதன் ஸ்னாப்டிராகன் பிளாட்ஃபார்ம் மற்றும் 3,000 யுவான் (சுமார் ரூ.40,000) பிரிவில் நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக விலை வரம்பிற்கு செல்லாமல், பிரீமியம் ஹார்டுவேரை தேடும் கேமர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக அமையக்கூடும்.


Click it and Unblock the Notifications