வாங்குனா இப்புடி ஒரு போன் வாங்கனும்.. 7560mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் (Redmi K90 Pro Max) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. 7560mAh பேட்டரி, ஐபி69 ரேட்டிங், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Redmi K90 Pro Max Specifications): 6.9-இன்ச் 2கே 12-பிட் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், டிசி டிம்மிங், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் உடன் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி உள்ளது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி போன் வெளிவந்துள்ளது.
50எம்பி Light Fusion 950 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் ரியர் கேமரா உதவியுடன் 8கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். அதேபோல் 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), போஸ் ட்யூனிங் செய்யப்பட்ட 2.1ch ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன.
7560mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50று வயர்லெஸ் சார்ஜிங், 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4, வைஃபை 7, என்எப்சி, குளோனாஸ், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

தற்போது ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் விலை:
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 3999 yuan (ரூ.49,310)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 4499 yuan (ரூ.55,465)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 4799 yuan (ரூ.59,160)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 5299 yuan (ரூ.65,325)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் (Champion Lamborghini SQUADRA CORSE Edition) மாடலின் விலை 5499 yuan (ரூ.67,795)


Click it and Unblock the Notifications








