ரெட்மி களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே90 மேக்ஸ் (Redmi K90 Max) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 21-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி கே90 மேக்ஸ் அம்சங்கள் (Redmi K90 Max Specifications): 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் (MediaTek Dimensity 9500 chipset) உடன் ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) வசதி இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் இந்த புதிய ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுட் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers)உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் ரெட்மி கே90 மேக்ஸ் போனில் உள்ளன. அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
photos credits: 91mobiles, Redmi


Click it and Unblock the Notifications








