Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 6500mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி கே80 அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் இந்த புதிய ரெட்மி போனின் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி கே80 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K80 Ultra specifications): தரமான டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் ( Dimensity 9400 Plus chipset)உடன் இந்த ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

குறிப்பாக 1.5கே ரெசல்யூஷன் கொண்ட ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 6500எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), ட்ரிபிள் ரியர் கேமராக்கள் எனப் பல சிறப்பன அம்சங்களுடன் இந்த ரெட்மி கே80 அல்ட்ரா போன் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 14சி 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி 14சி 5ஜி அம்சங்கள் (Redmi 14C 5G Specifications): ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் ரெட்மி 14சி 5ஜி போன் வெளிவந்துள்ளது. அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். ஸ்டார்லைட் ப்ளூ (Starlight Blue), ஸ்டார்டஸ்ட் பர்பிள் (Stardust Purple) மற்றும் ஸ்டார்கேஸ் பிளாக் (Stargaze Black) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்

6.88-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த சியோமி 14சி 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பிரைட்னஸ், 1640 × 720 பிக்சல்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் டிசி டிமிங், TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மர்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

Xiaomi HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers), 3.5எம்எம் ஆடியோ ஜாக் , எப்எம் ரேடியோ உள்ளிட்ட சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

5160mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.மேலும் இந்த போனின் எடை 205 கிராம் ஆகும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி 14சி 5ஜி போனில் உள்ளன. இந்த ரெட்மி 14சி 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.9,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K80 Ultra specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X