Home
Mobile

புதிய Redmi 5ஜி போன் அறிமுகம்.. 7410mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே80 அல்ட்ரா (Redmi K80 Ultra) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபி68 ரேட்டிங், ஒஎல்இடி டிஸ்பிளே, 7410எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி கே80 அல்ட்ரா போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி கே80 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K80 Ultra Specifications): 6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி கே80 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் , 2772 xc 1280 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

புதிய Redmi 5ஜி போன் அறிமுகம்.. 7410mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9400 பிளஸ் 3என்எம் எஸ்ஒசி (Octa-Core Dimensity 9400+ 3nm SoC) சிப்செட் உடன் இந்த ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு கேமிங் பயனர்களை கவரும் வகையில் இம்மார்டலிஸ் ஜி925 எம்சி12 ஜிபியு (Immortalis-G925 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது.

சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi Hyper OS 2) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு இந்த போனின் மூலம் 8கே வீடியோ பதிவு செய்யலாம்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அதேபோல் 7410mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

புதிய Redmi 5ஜி போன் அறிமுகம்.. 7410mAh பேட்டரி.. எந்த மாடல்?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி போனில் உள்ளன. மேலும் சாண்ட்ஸ்டோன் கிரே (Sandstone Gray), மூன் ராக் ஒயிட் (Moon Rock White), ஸ்ப்ரூஸ் கிரீன் (Spruce Green) மற்றும் ஐஸ் ஃப்ரண்ட் ப்ளூ (Ice Front Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ரெட்மி கே80 அல்ட்ரா விலை:

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே80 அல்ட்ரா மாடலின் விலை 2599 yuan (இந்திய மதிப்பில் ரூ.31,050)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே80 அல்ட்ரா மாடலின் விலை 2799 yuan (இந்திய மதிப்பில் ரூ.33,440)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே80 அல்ட்ரா மாடலின் விலை 2999 yuan (இந்திய மதிப்பில் ரூ.35,830)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே80 அல்ட்ரா மாடலின் விலை 3299 yuan (இந்திய மதிப்பில் ரூ.39,415)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ரெட்மி கே80 அல்ட்ரா மாடலின் விலை 3799 yuan (இந்திய மதிப்பில் ரூ.45,385)

Best Mobiles in India

English summary
Redmi K80 Ultra launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X