அடுத்த Redmi போன் ரெடி.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. 7410mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே80 அல்ட்ரா (Redmi K80 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் விரைவில் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரெட்மி கே80 அல்ட்ரா போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி கே80 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K80 Ultra Specifications): 6.83-இன்ச் எம்9 டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772×1280 பிக்சல்ஸ், 3200 நிட்ஸ் பிரைட்னஸ், 144 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் (Dimensity 9400 Plus chipset) உடன் இந்த ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி லைட் ஹண்டர் 800 சென்சார் + 8எம்பி OV08F அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராவுடன் இந்த ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
D2 discrete GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
7410mAh பேட்டரி உடன் ரெட்மி கே80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜி வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, வைஃபை, என்எப்சி, ஐசு பிளாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி போனில் உள்ளன. ஸ்ப்ரூஸ் கிரீன்(Spruce Green), ஐஸ் ப்ளூ (Ice Blue), மூன் ராக் ஒயிட் (Moon Rock White) மற்றும் சாண்ட்ஸ்டோன் கிரே (Sandstone Grey)நிறங்களில் இந்த போன் வெளிவரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, சற்று உயர்வான விலையில் ரெட்மி கே80 அல்ட்ரா போன் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








