நவம்பர் 27 உறுதி.. 120W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. வருகிறது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே80 ப்ரோ (Redmi K80 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ரெட்மி போன் ஆனது வரும் நவம்பர் 27-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த புதிய ரெட்மி போன் அறிமுகமாகும். இந்நிலையில் ரெட்மி கே80 ப்ரோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி கே80 ப்ரோ அம்சங்கள் (Redmi K80 Pro Specifications): 6.67-இன்ச் 2கே எம்9 ஒஎல்இடி டிஸ்பிளே உடன் உடன் இந்த ரெட்மி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3200×1440 பிக்சல்ஸ், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ரெட்மி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் கேமிங் ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதேபோல் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி.
50எம்பி Omnivision OV50 பிரைமரி கேமரா + 32எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி ISOCELL JN5 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரெட்டி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் ரெட்மி கே80 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி சிம் ஆதரவு, புளூடூத் 5.1, டூயல் பேண்ட் வைஃபை , என்எப்சி, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் ரெட்மி கே80 ப்ரோ போன் வெளிவரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த ரெட்மி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.
Photo Credit: Redmi


Click it and Unblock the Notifications