வாங்குனா இந்த புதிய Redmi போன் வாங்கனும்.. AMOLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே80 (Redmi K80) மற்றும் ரெட்மி கே80 ப்ரோ (Redmi K80 Pro) ஸ்மார்ட்போன்களை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. கூடிய விரைவில் இந்த போன்கள் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ரெட்மி போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி கே80 ப்ரோ அம்சங்கள் (Redmi K80 Pro Specifications): 6.67-இன்ச் 2கே 12-பிட் அமோலெட் (2K 12-bit AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3200 x 1440 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2160 இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Snapdragon 8 Elite) 3என்எம் சிப்செட் உடன் வெளிவந்துள்ளது ரெட்மி கே80 ப்ரோ போன். அதேபோல் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். பின்பு ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) மூலம் ரெட்மி கே80 ப்ரோ போன் இயங்குகிறது.
50எம்பி Light Fusion 800 sensor மெயின் கேமரா + 32எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி கே80 ப்ரோ. மேலும் 20எம்பி செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
இதுதவிர டால்பி அட்மாஸ், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை7 802 ஏடி, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி கே80 ப்ரோ போனில் உள்ளன.
ரெட்மி கே80 அம்சங்கள் (Redmi K80 Specifications): 6.67-இன்ச் 2கே 12-பிட் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி கே80 போன். இதன் டிஸ்பிளேவில் 3200 x 1440 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2160 இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது ரெட்மி கே80 போன். அதேபோல் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். பின்பு ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) மூலம் ரெட்மி கே80 ப்ரோ போன் இயங்குகிறது.
50எம்பி Light Fusion 800 sensor மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி கே80 போன். மேலும் 20எம்பி செல்பி கேமரா, 6550mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

மேலும் டால்பி அட்மாஸ், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை7 802 ஏடி, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
ரெட்மி கே80 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.29,170-ஆக உள்ளது. பின்பு ரெட்மி கே80 ப்ரோ போனின் ஆரம்ப விலை ரூ.43,180-ஆக உள்ளது. ஸ்னோ ராக் ஒயிட் (Snow Rock White), மவுண்டன் கிரீன் (Mountain Green), மிஸ்டிரியஸ் நைட் பிளாக் (Mysterious Night Black), ட்விலைட் மூன் ப்ளூ (Twilight Moon Blue) நிறங்களில் இந்த போன்கள் வாங்க கிடைக்கும். விரைவில் இந்த போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications