மார்க்கெட்டே அதிர போகுது.. 50எம்பி ரெட்மி.. 120W சார்ஜிங்.. வருகிறது Redmi போன்கள்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் அடுத்து ரெட்மி கே80 (Redmi K80) மற்றும் ரெட்மி கே80 ப்ரோ (Redmi K80 Pro) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன்கள் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி போன்கள் வெளிவரும்.
மேலும் ஆன்லைனில் தற்போது ரெட்மி கே80 மற்றும் ரெட்மி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். அதாவது இந்த இரண்டு போன்களும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. மேலும் வெள்ளை, கருப்பு, சில்வர் போன்ற நிறங்களில் இந்த போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி கே80 ப்ரோ அம்சங்கள் (Redmi K80 Pro Specifications): 2கே Huaxing எல்டிபிஎஸ் பிளாட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ரெட்மி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ((Dust & Water Resistant)கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதேபோல் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor)வசதியும் இந்த போனில் உள்ளது.
50எம்பி Omnivision OV50 பிரைமரி கேமரா + 32எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி ISOCELL JN5 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரெட்டி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 20எம்பி செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும்.
ரெட்மி கே80 அம்சங்கள் (Redmi K80 Specifications): 2கே Huaxing எல்டிபிஎஸ் பிளாட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி கே80 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் ரெட்மி கே80 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதேபோல் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி Omnivision OV50 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே80 ஸ்மார்ட்போன். மேலும் 20எம்பி செல்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி கே80 போன் வெளிவரும்.
ஆனால் ரெட்மி கே80 மற்றும் ரெட்மி கே80 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போன்களில் இருக்கிறது.
photo credit: GizmoChina, weibo, gsmchina, 91mobiles


Click it and Unblock the Notifications








