6.67-இன்ச் டிஸ்பிளே.. 512ஜிபி மெமரி.. மிரட்டலான ரெட்மி 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ரெட்மி போன்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதாவது ரெட்மி நிறுவனம் ரெட்மி கே70இ எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி கே70இ ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே(OLED display) வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகப் பார்ப்போம்.
ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 8300(MediaTek Dimensity 8300) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அல்ட்ரா வைடு கேமரா மற்றும் மேக்ரோ கேமராக்களும் இந்த போனில் இருக்கும். இதுதவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ரெட்மி கே70இ (Redmi K70E) ஸ்மார்ட்போன் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (90W charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications