Home
Mobile

மிரளவிடும் ரெட்மி... 90W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. அசத்தும் புதிய போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் ரெட்மி கே70இ எனும் ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ரெட்மி கே70இ (Redmi K70e) ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மிரளவிடும் ரெட்மி... OLED டிஸ்பிளே.. அசத்தும் புதிய போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 8300 (MediaTek Dimensity 8300) சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.குறிப்பாக டைமன்சிட்டி 8300 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

ரெட்மி கே70இ ஸ்மார்ட்போனில் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அல்ட்ரா வைடு கேமரா மற்றும் மேக்ரோ கேமராக்களும் இந்த போனில் இருக்கும். இதுதவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் இந்த ரெட்மி கே70இ போன் அறிமுகமாகும்.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும் ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (90W charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மிரளவிடும் ரெட்மி... OLED டிஸ்பிளே.. அசத்தும் புதிய போன்.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K70e key specifications, launch timeline leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X