அதிரும் மார்க்கெட்.. 50MP கேமரா.. 12GB ரேம்.. நவம்பர் 29-ல் களமிறங்கும் மூன்று ரெட்மி போன்கள்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் வரும் நவம்பர் 29-ம் தேதி ரெட்மி கே70இ, ரெட்மி கே70, ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன்கள் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி கே70இ, ரெட்மி கே70, ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் சமீபத்தில் ரெட்மி கே70 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்தது. இப்போது இது குறித்து சற்று விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

6.67-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே(OLED display) வசதி ரெட்மி கே70 ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரெட்மி கே70 (Redmi K70) ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் உதவியுடன் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த போனின் சிப்செட். கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர இந்த ரெட்மி போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் மேக்ரோ கேமராக்களும் இந்த போனில் இருக்கும். இதுதவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்(90W charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70 ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் ரெட்மி கே70இ, ரெட்மி கே70 ப்ரோ போன்களும் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications