அலறும் மார்க்கெட்.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. Snapdragon சிப்செட்.. வருகிறது தரமான ரெட்மி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் அடுத்து ரெட்மி கே70 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற கூறப்படுகிறது. குறிப்பாக ரெட்மி கே70 சீனாவில் அறிமுகமானதும் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இப்போது 3C சான்றிதழ் தளத்தில் இந்த ரெட்மி கே70 போனின் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ரெட்மி கே70 போனின் மாடல் எண் 2311DRK48C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் ஃபுல் எச்டி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 16ஜிபி ரேம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த அசத்தலான ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு இந்த ரெட்மி கே70 போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போத வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் முழு அம்சங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ரெட்மி 12 5ஜி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.ரெட்மி 12 5ஜி போன் ஆனது 6.79 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2 ) சிப்செட் கொண்டுள்ளது ரெட்மி 12 5ஜி போன். குறிப்பாக இதுபோன்ற சிப்செட் கம்மி விலையில் வெளிவருவது இதுவே முதல்முறை. மேலும் இந்த சக்திவாய்ந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
இதில் ரெட்மியின் எம்ஐயூஐ 14 யூஐ ஓஎஸ் (MIUI 14 UI OS) மற்றும் மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ரெட்மி போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வசதி இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 12 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபாயரிங் லவுட்ஸ்பீக்கர், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மூன்ஸ்டோன் சில்வர் ( Moonstone Sliver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய 3 கலர்களில் ரெட்மி 12 5ஜி போன் கிடைக்கும்.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 12 5ஜி போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த ரெட்மி 12 5ஜி போன் ஆனது ரூ.11,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








