விஸ்வரூப விலை.. வெறும் ரூ.29,865 போதும்.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. FUSION கேமரா.. எந்த மாடல்?
இந்திய ரெட்மி பிரியர்களை வெயிட்டிங் மோடில் போடும்விதமாக வெறும் ரூ.29,865 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற ப்ரீமியம் அம்சங்களுடன் ரெட்மி கே70 (Redmi K70) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ரெட்மி கே70 அம்சங்கள் (Redmi K70 Specifications): இந்த ரெட்மி போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) சப்போர்ட் வருகிறது.

இந்த கே70 மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதோடு 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த போனில் 6.67 இன்ச் (3200 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. அதோடு 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது.
இந்த ரெட்மி கே70 போனில் எல்இடி லைட்டுடன் கூடிய மிரட்டலான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, லைட் ப்யூஷன் 800 (Light Fusion 800) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.
இதுவொரு ஓஐஎஸ் (OIS) + ஈஐஎஸ் (EIS) மாடலாகும். இந்த கேமராவில் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டிருக்கிறது.

இந்த போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வருகிறது. வெறும் 8 நிமிடங்களில் இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த மாடலில் டைப்-சி ஆடியோ (Type-C Audio) வருகிறது.
அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்டிருக்கிறது. இந்த போன் 209 கிராம் எடை கொண்டிருக்கிறது. பிளாக் (Black), வைட் (White), மூன் ப்ளூ (Moon Blue) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய 4 கலர்களில் வருகிறது. இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,865ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,750ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,280ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,985ஆக இருக்கிறது. வெறும் ரூ.30,000 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், லைட் ப்யூஷன் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பக்கா ப்ரீமியம் அம்சங்கள் வேண்டுமானால், இந்த ரெட்மி போன் நல்ல தேர்வாகும். இந்தியாவில் ஒரு சில மாதங்களில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications