செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 120W சார்ஜிங்.. Sony கேமரா.. அறிமுகமானது Redmi போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே70 அல்ட்ரா (Redmi K70 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக 16ஜிபி ரேம், ஐபி68 ரேட்டிங், 5500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி கே70 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K70 Ultra Specifications): 6.7-இன்ச் 1.5கே ஒஎல்இடி (1.5K OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 3840Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz high-frequency PWM dimming), 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9300 பிளஸ் (Octa-Core Dimensity 9300+) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் பக்கா கேமிங் அவுட்புட் கொடுக்கும் இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IP68டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா போன் அறிமுகமாகும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எம்எக்ஸ்906 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் இந்த ரெட்மி போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக டால்பி அட்மாஸ் ( Dolby Atmos), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன.
120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 7 802.11ஏக்ஸ் (Wi-Fi 7 802.11 ax), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளது. பிளாக் (Black), ஸ்னோ ஒயிட் (Snow White), ஐஸ ப்ளூ ((Ice Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் ஆரம்ப விலை ரூ.29,930-ஆக உள்ளது. மேலும் ரெட்மி கே70 அல்ட்ரா அல்ட்ரா சுப்ரீம் சாம்பியன் எடிஷன் (Redmi K70 Ultra Supreme Champion Edition) மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் ஆரம்ப விலை ரூ.46,050-ஆக உள்ளது. ஆரஞ்சு மற்றும் கிரீன் நிறங்களில் ரெட்மி கே70 அல்ட்ரா அல்ட்ரா சுப்ரீம் சாம்பியன் எடிஷன் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








