Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 5500mAh பேட்டரி.. 24GB ரேம்.. சோனி கேமரா.. புதிய ரெட்மி போன் ரெடி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதன்படி விரைவில் ரெட்மி கே70 அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரெட்மி கே70 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K70 Ultra specifications): 5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். பின்பு எச்டிஆர் 10 பிளஸ்,டால்பி விஷன், 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்நஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. இந்த போனின் டிஸ்பிளே சிறந்த டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 9300+ SoC) வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு மாலி-ஜி720 எம்பி12 ஜிபியு (Mali-G720 MP12 GPU)கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி மெமரி வரை ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டே மிரள போகுது.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

50எம்பி சோனி LYTIA 800 சென்சார் + 108எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரெட்மி போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K70 Ultra will be launched soon with 5500mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X